உங்கள் பிறந்த தேதி சொல்லும் அதிர்ஷ்ட ரகசியங்கள்|The lucky secrets revealed by your date of birth|

Spread the love

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விசேஷமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரஞ்ச் நிறம் ராசியானது.

பிறந்த தேதி அதிர்ஷ்ட குறிப்புகள்

பிறந்த தேதி அதிர்ஷ்ட குறிப்புகள்

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள் கிழமை விசேஷம்; முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். கௌரியை வழிபடலாம்.வெண்முத்து அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்களால் அதிர்ஷ்டம் உண்டு. வடமேற்கில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். எண் 7-ம் இரண்டாம் எண் காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும். வெள்ளை நிறம் ராசியானது.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியாழக்கிழமை விசேஷம்; முக்கியப் பணிகளில் ஈடுபடலாம். ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபடவும். கனகபுஷ்பராகம் அணிவதன் மூலம் அதிர்ஷ்டம் கூடும். 2, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. வடகிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். மஞ்சள் நிறம் ராசியானது.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன், வெள்ளிக் கிழமைகள் விசேஷமானவை. குறிப்பிட்ட கிழமைகளில் முக்கிய பணிகளில் ஈடுபடலாம். கோமேதகம் அணியலாம். 1, 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. துர்கையை வழிபடவும். தென்மேற்கு திசையில் இருந்து நலம் உண்டாகும். கறுப்பு நிறம் ராசியானது.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன் கிழமை சிலாக்கியமானது. அந்தக் கிழமையில் முக்கிய பணிகளில் ஈடுபடலாம். 5, 6 எண்கள் அதிர்ஷ்டமானவை. மரகதக்கல் அணிவது நல்லது. ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபடுவதால் நன்மை பெருகும்.வட திசையில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். பச்சை நிறம் ராசியானது.

பிறந்த தேதி அதிர்ஷ்ட குறிப்புகள்

பிறந்த தேதி அதிர்ஷ்ட குறிப்புகள்

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர் களுக்கு வெள்ளிக்கிழமை விஷேடமானது; அன்று முக்கியமான காரியங்களில் ஈடுபடலாம். வைரக்கல் அணிவது நல்லது. 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. மகாலட்சுமி வழிபாடு சாலச்சிறந்தது. தென் கிழக்கு யோகமானது. இளநீலமும், வெண்மை நிறமும் ராசியானவை.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு திங்கள்கிழமை சிறப்பானது; அன்று முக்கிய பணிகளில் ஈடுபடலாம். வைடூரியம் அணியலாம். வடமேற்கு திசை விசேஷம். 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. கணபதியை வழிபடுவதால் நலம் கூடும். மெரூன் நிறம் ராசியானது.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு புதன், வெள்ளி, சனிக்கிழமைகள் விசேஷமானவை. நீலக்கல் நல்லது. மேற்கில் இருந்து நலம் உண்டாகும். 5, 6 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஐயப்பனையும் வழிபடலாம். கறுப்பு, கருநீல நிறம் ராசியானவை.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய், வியாழக்கிழமைகள் விசேஷமானவை. செம்பவளம் அணியலாம். தென் திசையில் இருந்து நலம் உண்டாகும். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டமானவை. திருமுருகனை வழிபடவும். சிவப்பு நிறம் ராசியானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *