“உங்கள் மகள் சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்” – சரத்பவாரிடம் ஆறுதல் சொன்ன மோடி | Your daughter Supriya is ready to help look after the country, along with us: Modi tells Sharad Pawar

Spread the love

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் சரத் பவாரின் தரப்பு பாஜகவுடன் இணையும் சாத்தியக்கூறுகளும் அடங்கும். மேலும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, மோடியின் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்ற பேச்சும் பல மாதங்களாகவே அடிபட்டு வருகிறது.

இதற்கிடையில், மறைந்த அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ​​சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை உறுப்பினருமான பார்த் பவார் ஆகியோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது குறித்து அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்களான பார்த்த், ஜே ஆகியோர் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சரத்பவார், புனே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை சுப்ரியா சுலே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *