சென்னையில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த அவர், ” இதுகுறித்து பலமுறை பேசிவிட்டோம். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் முதல்வரின் கவனத்தில் உள்ளது. ஆராயப்பட்டு உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றிருக்கிறார்.

தொடர்ந்து நேற்று புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் “தவெக கட்சி சமூகத்திற்கே ஒரு நோய்’ என்று விமர்சித்திருந்தார். இது குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த அருண்ராஜ், ” திமுக எந்த அளவுக்கு ஒரு பாசிச மனப்பான்மையோடு இருக்கிறது என்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சு காட்டுகிறது.
பாஜவை பற்றி நாம் குற்றச்சாட்டு வைத்தால், நாட்டுக்கே எதிரான குற்றச்சாட்டு என்பார்கள். திமுக பற்றி குற்றம்சாட்டினால், தமிழ் சமூகத்திற்கு எதிரானது என்கிறார்கள். எந்த விதத்தில் தவெக இந்த சமூகத்திற்கு ஒரு நோய் என்று சொல்லுகிறார்.