“ஜனநாயகம்’ என்று பேசுகிறவர்கள், இன்றைக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். திரையரங்கிற்குச் சென்று ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து அழுகிறார்கள். ஆனால், நிஜத்தில் ஒரு மனிதனுக்கு ரத்தம் வரும் அளவிற்குத் தாக்குவதுதான் ஜனநாயகமா? காவல்துறை உங்கள் அதிகாரத்தின் கீழ் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா?
இவற்றுக்கெல்லாம் தற்போதைய அரசாங்கம் கண்டிப்பாகப் பதிலளித்தே ஆக வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சக்கூடிய இயக்கம் அல்ல. சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் வழியே இதற்கு எதிராகத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.” என்றார்.