தஞ்சாவூரில் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து திமுக நடத்திய போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசிய விதம் சர்ச்சையாகியிருந்தது.
“இந்த விவகாரத்தை அப்படியே விட்டு விடாதீர்கள். எதிர்த்து களமாடுங்கள்’ என்று தவெக தலைமையிடமிருந்து நள்ளிரவில் வந்த உத்தரவைத் தொடர்ந்து உதயநிதிக்கு எதிராக தவெகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மா.செக்கள் ஒட்டுமொத்த முகாமும் களத்தில் குதித்திருக்கிறது.
இதுதொடர்பாக தவெக-வின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம். “மேகதாது விவகாரமாக நடந்த போராட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் இரட்டை அர்த்தத்தில் முதல்வரை இழிவுப்படுத்தும் விதமாக உதயநிதி பேசியிருக்கிறார். இது கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனத்தை எட்டும் முன்பாகவே சமூகவலைத்தளங்களில் விமர்சனத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துவிட்டது.