உத்தரகாண்ட் தேர்தல்: “5.2 லட்சம் பெண்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம்” – பாஜக அரசு அறிவிப்பு | Uttarakhand BJP government announces a grant of Rs 20,000 each to 5.2 lakh women, ahead of the elections

Spread the love

அவர்களில் 5.2 லட்சம் பேருக்குத் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இது போன்ற மகளிர் குழுக்களில் சேராத பெண்களுக்கு ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்து இருப்பது பெண் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் அறிவிக்கப்பட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஐந்தாண்டுகளில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் கூறுகையில், “கடந்த ஒரு வருடமாக, தேர்தலுக்கு முன்பு, பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் எங்கள் சகோதரிகளுக்குக் கொஞ்சம் பணம் தரும் என்று நான் கூறி வந்தேன்.

அது இறுதியில் உண்மையாகி விட்டது. பீகாரில் அது வெற்றிகரமாக இருந்தது, ஆனால் அது இங்கு நடக்காது. பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் பெண்கள் அதை ஏற்க வேண்டும். வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து அந்தப் பணம் வழங்கப்படுகிறது. எனவே, பயனாளிகள் அதை ஏற்றுக்கொண்டு, வளர்ச்சி மற்றும் நலனுக்காக மட்டுமே வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *