மேஷம்
இன்று சந்திராஷ்டமம் நிலவுவதால் புதிய முயற்சிகளைத் தள்ளிவைத்து கவனமுடன் செயல்படுவது அவசியம். காரியத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் யாரிடமும் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் மன அமைதியைப் பேண வேண்டும். நிதி விவகாரங்களில் பிறருக்கு வாக்குறுதி அளிப்பதிலும், சொத்து ஆவணங்களில் கையெழுத்திடுவதிலும் கூடுதல் எச்சரிக்கை தேவை. பயணங்களில் கவனம் செலுத்துவதுடன் இறை வழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபடுவது நன்மைகளைத் தரும்.
ரிஷபம்
நிதானமான செயல்பாடுகளும் சாதனைக்கு வழியமைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் மீண்டும் கவனத்திற்கு வந்து எளிதாக நிறைவடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பும், தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் அல்லது புதிய வாய்ப்புகளின் அறிமுகமும் மனநிறைவைத் தரும்.
மிதுனம்
தகவல் தொடர்புகள் வெற்றியத் தேடித்தரும் நாள். நீண்டநாட்களாகப் பேசப்பட்டு வந்த முக்கிய விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்தாலும் திறம்படக் கையாளுவீர்கள். தொழிலில் புதிய யோசனைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதுடன் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் பணவரவிற்கான சாத்தியங்களும் அதிகரிக்கும்.
கடகம்
உணர்ச்சிகளைத் தவிர்த்து உண்மைத் தன்மையோடு அணுக வேண்டிய நாள். குடும்பத்தில் எழும் பொறுமையை சோதிக்கும் சூழல்களை அமைதியாகக் கையாண்டால் சாதகமாக மாறும். உத்தியோகத்தில் உங்களது உழைப்பிற்கு மறைமுகமாக இருந்த பாராட்டுக்கள் இனி வெளிப்படையாகக் கிடைக்கும்.
சிம்மம்
உங்களது தனித்துவம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். பணியிடத்தில் முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரமும், முக்கியப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான சூழலும் நிலவும். தொழிலில் புதிய திட்டங்களைத் தொடங்கும் எண்ணம் உருவாகும். வியாபாரத்தில் நம்பகமான தொடர்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது. பணவரவு சீராக இருந்தாலும் வீண் செலவுகளைக் குறைப்பது சிறந்தது.
கன்னி
நீண்டநாளாகத் தாமதமான ஆவணப் பணிகள் முடிவடையும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் விரைவாக முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களது திறமைக்கு ஏற்ற புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் கணக்குகளைச் சரிபார்ப்பது அவசியமாகும். குடும்பத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
துலாம்
திருமண முயற்சிகள் கைகூடி சாதகமான பலன்களைத் தரும் நாள். கடமைகளில் இருந்த தொய்வு நீங்கி சுறுசுறுப்பு கூடும். உடல் ஆரோக்கியம் சீரடைந்து எதிர்பார்த்த நிதி ஆதாயங்கள் சிறப்பாக வந்து சேரும்.
விருச்சிகம்
சவாலான பணிகளையும் வெற்றிகரமாக முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் உங்களது வித்தியாசமான அணுகுமுறை போட்டியாளர்களை விட உங்களை முன்னிலைப்படுத்தும். பண விஷயத்தில் ஒரே நேரத்தில் பல முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து, எதிர்காலச் சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் முக்கிய ஆலோசனைகள் நடக்கும்.
தனுசு
செயல்வடிவம் பெறும் புதிய சிந்தனைகளால் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது புதிய வாய்ப்புகள் குறித்த தகவல்கள் வரலாம். வெளிப்படைத் தொடர்புகள் மூலம் தொழிலிலும் வியாபாரத்திலும் புதிய சந்தைகள் உருவாகும். பணவரவு சீராக இருக்கும், தேவையற்ற கடன்களைத் தவிர்ப்பது நல்லது.
மகரம்
பொறுமையான செயல்பாடுகள் உறுதியான முன்னேற்றத்தைத் தரும். உத்தியோகத்தில் உங்களது பொறுப்புணர்வு மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். அரைகுறையாக இருந்த வேலைகள் நிறைவுறும். தொழிலில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தொடர்பு கொள்வர். குடும்பச் செலவுகள் அதிகரித்தாலும் சேமிக்கும் எண்ணம் வலுப்படும்.
கும்பம்
புதிய அணுகுமுறைகளும் முயற்சிகளும் எதிர்பார்த்த நல்ல பலன்களைத் தரும். அலுவலகத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் விரைவாக முடியும். தொழிலில் புதுமையான யோசனைகளுக்கு ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். நண்பர்கள் வழியில் பயனுள்ள தொடர்புகள் கிடைக்கும்.
மீனம்
உள்ளுணர்வின் வழிகாட்டுதல் மூலம் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் உழைப்பு வெளிப்படையாகப் பாராட்டப்படும். தொழிலில் நீண்டநாளாக இருந்த சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். பணவரவு சற்று தாமதமானாலும் வந்து சேரும். குடும்பத்தில் அன்பான உரையாடல்கள் மனதிற்கு அமைதியைத் தரும்.
