இந்த ஆண்டு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரிய பெரிய உச்சங்களைத் தொட்டு வந்தன. ஆனால், அப்போதெல்லாம் இந்தியப் பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் காணப்படவில்லை. இதற்கு ஒரே காரணம்தான். அது ‘ஏ.ஐ’.
அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் ஏ.ஐ வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளன. மேலும், அந்த நாடுகளில் ஏ.ஐக்குத் தேவையான முக்கியப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால், இந்தியச் சந்தையில் ஏ.ஐ-க்கான பங்களிப்பு பெரிதாக இதுவரை எதுவும் இருந்ததில்லை. நாம் இன்னும் ஏ.ஐ மற்றும் ஏ.ஐ சார்ந்த விஷயங்களை இறக்குமதிதான் செய்து வருகிறோம்.
அதனால்தான், அந்த நாடுகளின் சந்தை ஏறுமுகத்தைக் கண்டபோதெல்லாம் நம் சந்தை சைலண்ட் மோடில் இருந்தது. ஆனால், இந்த மைனஸ் இப்போது இந்தியப் பங்குச்சந்தைக்குப் பெரிய ப்ளஸாக மாறியுள்ளது.

நேற்று (நவம்பர் 6) சந்தை முடியும்போது, நிப்டி 25,030-ல் முடிந்துள்ளது. கடந்த வாரம் 22,500-களில் வர்த்தகமான நிப்டிதான் இந்த ஏற்றத்தைக் கண்டுள்ளது.
கடந்த மாதத்தின் இறுதியிலிருந்தே ஏ.ஐ துறையில் தொடர்ந்து சறுக்கல் இருந்து வந்தது. ஏ.ஐ துறையின் வளர்ச்சிக்கேற்ற கட்டமைப்புகள் உலகில் இல்லை. இதனால், அதன் வேகம் தடைப்படும் என்று கூறப்படுகிறது.
இதனால், ஏ.ஐ-யால் இந்த ஆண்டு ஏற்றத்தைக் கண்ட சந்தைகள் டல் அடிக்கத் தொடங்கின.