உலக பொருளாதாரத்தை கண்டரோலில் எடுக்கும் சீனா.. ஆனாலும் அசராமல் நிற்கும் அமெரிக்கா! அது எப்படி? | Top Chinese banks: 7 out of 10 Are from China, but still can’t control world trade, What is means

Spread the love

International

oi-Vigneshkumar

பெய்ஜிங்: ஒரு காலத்தில் சர்வதேச பொருளாதாரத்தை மொத்தமாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறி வருகிறது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக சீனா மெல்ல கண்ட்ரோலை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.

உலகின் முன்னணி வங்கிகள் குறித்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் தி பேங்கர் இணையதளம் வெளியிடும். அதன்படி 2026ம் ஆண்டுக்கான பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் உலக பொருளாதாரம் எப்படி மாறி வருகிறது. அதில் சீனாவின் ஆதிக்கம் எந்தளவுக்கு அதிகரித்து வருகிறது என்பது தெரிய வரும்.

China india world

சீனாவின் ஆதிக்கம்

முன்பெல்லாம் இந்த அமெரிக்க வங்கிகளே ஆதிக்கம் செலுத்தும். அமெரிக்காவுக்கு அடுத்த ஐரோப்பிய வங்கிகள் வரும். ஆனால், இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ரேங்கில் உலகின் முதல் 10 பெரிய வங்கிகளில் 7 வங்கிகள் சீனாவை சேர்ந்தவை. அதில் ஐசிபிசி (Industrial and Commercial Bank of China) முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து சிசிபி (China Construction Bank), சீன விவசாய வங்கி மற்றும் பேங்க் ஆஃப் சீனா ஆகியவை முதல் நான்கு இடங்களை தக்க வைத்துள்ளன. இது மட்டுமின்றி போஸ்டல் சேவிங்ஸ் பேங்க் ஆஃப் சீனா முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

ஒரு வங்கி எந்தளவுக்கு நிதி இழப்புகளை சமாளிக்கும் திறனை கொண்டு இருக்கிறது. ஒரு வங்கியின் கடன் வழங்கும் வலிமை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி முறை பெரும்பாலும் வங்கி கடன்களை சார்ந்தே இயங்குகிறது. உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தொழிற்துறை விரிவாக்கம் போன்ற துறைகளில் அரசின் சப்போர்ட் உடன் பெருமளவில் கடன்கள் வழங்கப்படுவதால், சீன வங்கிகள் மிக பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளன.

ஆனா ஒரு ட்விஸ்ட்

அதேநேரம் அதிக கடன் கொடுப்பதாலேயே சீனாவிடம் பவர் போய்விட்டது என சொல்லிவிட முடியாது என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் சர்வதேச பணப்பரிவர்த்தனைகளில் இன்னும் அமெரிக்க டாலரே ஆதிக்கம் செலுத்துகிறது. உலகளாவிய பண பரிவர்த்தனைகளில் 51 சதவீதம் டாலரில் தான் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 22% யூரோவிலும் 7% பிரிட்டிஷ் பவுண்டிலும் நடக்கிறது. வெறும் 2% மட்டுமே சீன கரன்சியான யுவானில் நடக்கிறது.

சீனாவின் திட்டம்

அதேநேரம் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்குப் பிறகு, சீனா தனது சொந்த சர்வதேச பணப்பரிவர்த்தனை அமைப்பான CIPSஐ வேகமாக விரிவுபடுத்தி வருகிறது. இந்தாண்டு தொடக்கம் வரை 1,791 நிதி நிறுவனங்கள் இந்த சிப்ஸில் இணைந்திருந்தன. இதே வேகத்தில் வளர்ந்தால் அமெரிக்காவுக்கு போட்டியாக இது மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதாவது சீனாவின் வங்கி ஆதிக்கம் கவனிக்க வேண்டிய விஷயமாக இருந்தாலும், ஒட்டுமொத்த கண்ட்ரோலும் சீனாவிடம் போய்விட்டதாக அஞ்ச தேவையில்லை. இன்னுமே சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கமே தொடர்கிறது. ஆனால், சீனாவின் வளர்ச்சியை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என்பதே உண்மை!

இந்தியா

இந்தியாவை பொறுத்தவரை உலகின் மிக பெரிய வங்கிகள் பட்டியலில் இந்திய வங்கிகள் டாப் 40 இடங்களில் கூட இல்லை. அதிகபட்சமாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 45வது இடத்திலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கி 76-வது இடத்திலும் உள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *