டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்தபோது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறியபோது கூட அதைக் கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்தானே இவர்?
மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம்தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது.
ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளைக் கேட்கும் எதிர்க்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்துப் பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும்.
அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா? உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக்காட்டினால், அதைத் திருத்திக்கொள்ளப் பாருங்கள் அல்லது, மறுத்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களைக் கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள். புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.