நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த ஊட்டி மலர் கண்காட்சி குறித்து பூங்கா நிர்வாகத்தினர், ” ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 128- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. வரவிருக்கும் 28 ம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மலர் கண்காட்சியில் 7 லட்சம் கொய் மலர்களால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்,

மகாபலிபுரம் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு மாதிரி மலர் அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 275 வகைகளில் 7 லட்சம் செடிகளில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. மலர் மாடங்களிலும் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தங்களின் விருப்பம் போல் கண்டு ரசிக்கலாம்” என்றனர்.