300 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பும் சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடு|Chola Treasure Returns Home After Centuries in Netherlands

Spread the love

30 கிலோ எடை… 21 தகடுகள்… சோழர்களின் மாஸ்டர்பீஸ்!

இந்தச் செப்பேட்டுத் தொகுப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது ஆச்சரியத்தில் உச்சத்துக்கே அழைத்து செல்கிறது…

பிரம்மாண்ட எடை: மொத்தம் 21 செப்பேடுகள், ஒரு கனமான வளையத்தில் கோர்க்கப்பட்டு, சுமார் 30 கிலோ எடையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரச முத்திரை: அந்த வளையத்தின் முன்பகுதியில் சோழர் காலத்து அதிகாரப்பூர்வ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது.

செப்பேட்டின் அளவு: ஒவ்வொரு செப்பேடும் 14 இன்ச் நீளமும் ஐந்து இன்ச் அகலமும் கொண்டது.

இருமொழிக் கலவை: முதல் 5 செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், மீதமுள்ள 16 செப்பேடுகள் தமிழ் எழுத்துகளிலும் செதுக்கப்பட்டுள்ளன.

ஆனைமங்கலம் செப்பேடு

ஆனைமங்கலம் செப்பேடு
Narendra Modi | X

வரலாற்றுக் கருவூலம்: இராஜேந்திர சோழன் காலத்து கல்வி, கலாச்சாரம், அரசியல், கட்டடக்கலை, பொருளாதாரம் மற்றும் ஆட்சியமைப்பு பற்றிய குறிப்புகள் இதில் அணுவணுவாக விவரிக்கப்பட்டுள்ளன.

26 கிராமங்கள் தானம்: ஆமூர், நாணலூர், புத்தாகுடி, மூஞ்சிகுடி, சந்திரபாடி, உதய மார்த்தாண்ட நல்லூர் உள்ளிட்ட ஊர்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இராஜராஜ சோழனின் சாதனைகளுடன் 26 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியை இதன் மூலம் அறியலாம்.

ஒருவேளை இந்தச் செப்பேடுகள் மட்டும் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால், உலகப் புகழ்பெற்ற சோழப் பேரரசின் முழுமையான வரலாற்றை நாம் வரிசைப்படுத்தி அறிய முடியாமலே போயிருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *