இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில் த.வெ.க-வைச் சேர்ந்த தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரை குழந்தைகள்தான் தெய்வம்.
ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் கட்சிக்காகப் பிரசாரம் செய்து வெற்றியைப் பெற்றுத் தந்தது இளைஞர்களும் குழந்தைகளும்தான். அதனால் எங்களின் ஆதரவும் துணையும் எப்போதும் குழந்தைகளுக்கே இருக்கும்” என்றார்.
மேலும், புதிய விதைகள் இயக்கத்தைப் பாராட்டிய அவர், குறுகிய காலத்திலேயே மாணவர்களுக்கு இலவசமாகச் சிறந்த பயிற்சி அளித்து தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைத்தது மிகப்பெரிய சாதனை எனத் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்ததில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்ததாகக் கூறிய ஸ்ரீநாத், தமிழர்களின் பாரம்பர்ய கலையான சிலம்பத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சிக்கு முதல்வரும் தங்களின் கழகமும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார்.