எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல் | Houthis Attack Row: Egypt parliament approves military support for Saudi Arabia

Spread the love

International

oi-Nantha Kumar R

துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற எகிப்து தாயாராகி வருகிறது. சவுதி அரேபியாவிற்கு தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்த போரில் சவுதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் எகிப்தும் நுழைய வாய்ப்புள்ளதால் இந்த மோதல் இன்னும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது.

houthis-attack-row-egypt-parliament-approves-military-support-for-saudi-arabia

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள், சவுதி அரேபியாவுடன் மோதி வருகிறது. ஹவுதிகள் தற்போது சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ‘மெக்கா’ ஒப்பந்தத்தின் இந்த மோதலில் துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சவுதி அரேபியாவிற்காக உதவி வருகின்றன.

ஆனால் இந்த 2 நாடுகளின் உதவிகள் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. இப்படியான சூழலில் தான் எகிப்து நாடு சவுதி அரேபியாவிற்கு உதவி செய்ய தயாராகி உள்ளது.

இதனை சமீபத்தில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாஹி அல்-சிசி உறுதி செய்தார். இதுபற்றி அவர், ”சவுதி அரேபியாவை பாதுகாக்கவும், அதன் இறையாண்மையைக் காக்கவும் அந்த நாடு கோரும் எந்தவொரு உதவியையும் எகிப்து செய்யும். சவுதி அரேபியாவை பாதுகாக்க எங்களின் ராணுவத்தையும் அனுப்புவேன். இதற்காக நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில் தான் சவுதிக்கு அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் வழங்க எகிப்து நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *