“எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!” – டெல்லி தடியடி வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | “Don’t waste our time!” – Supreme Court refuses urgent hearing on the Delhi lathi-charge case.

Spread the love

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் பேரணி நடத்தினர். இதனால் கடந்த சில நாள்களாக டெல்லியே ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், டெல்லி போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் எழுச்சி போராட்டமாக வெடித்திருக்கிறது. இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், “காவல்துறையினர் எவ்வாறு தடியடி நடத்தினார்கள், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினார்கள் என்பதற்கான காணொளி ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் தான் மாணவர்கள் இன்னும் போராட்டத்தைத் தொடர்கின்றனர். எனவே நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும். அமைதியான பொதுப் போராட்டத்தின் போது, டெல்லி காவல்துறையால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டது மற்றும் நீதிமன்றத்தின் கட்டுப்படுத்தும் தீர்ப்புகள் மதிக்கப்படாதது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து (suo motu) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.” என வாதிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *