வடகிழக்குப் பருவமழையில் அரசுக்கு கெட்டப் பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் விஜய் 2 மாதங்களுக்கு முன்பாக 7 அமைச்சர்களை சென்னைக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். மழை நீர்வடிகால் பணிகளை மேற்பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மழையின் போது களத்தில் நிற்க வேண்டியதுதான் இந்த 7 அமைச்சர்களின் வேலை.

அருண்ராஜ், பார்த்திபன், ரமேஷ், பிரபு, விக்னேஷ் என முதல்வர் தனக்கு நெருக்கமான நம்பகமான மாண்புமிகுக்களைத்தான் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். ஆனால், இவர்கள் மழைக்கு முன்பான மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்பார்வையிடவில்லை. ‘சென்னையில் தெற்கும் தெரியாத வடக்கும் தெரியாத அமைச்சர்களுக்கு பொறுப்பு கொடுத்தால் இதுதான் நிலைமை’ என திமுக கவுன்சிலர்களே தவெக அமைச்சர்களை வாரினர். முதல்வர் அப்போதுமே பொறுமைதான் காத்தார். ஆனால், அக்டோபர் 17 ஆம் தேதி இரவு மழை கொட்டித் தீர்த்த போது பொறுப்பு அமைச்சர்கள் யாருமே களத்தில் இல்லை.