“பார்ப்பதற்கு அப்பாவி போலிருக்கும் இவர்தான்..’
– டிவியில் இந்த வார்தைகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு நிமிடம் டிவி முன் ஓடி வந்து விடுகின்றனர் பலரும். இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ரஞ்சித்.
கடந்த வாரம் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய ரஞ்சித், அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது இது இரண்டாவது முறை என்கிறார்.
முதன்முதலாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
”பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப அசெம்ப்ளியில செய்தி வாசிக்கறதுல ஆரம்பிச்சது செய்திக்கும் எனக்குமான தொடர்பு. உடனெ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பையன்னு நினைச்சுடாதீங்க. செய்தி வாசிச்ச அளவுக்கு புத்தகத்தை வாசிச்சது கிடையாது. அதனால் பிளஸ் டூவுல ஒரு பாடத்துல ஃபெயில். இதுக்கு மேல அந்தக் கதைக்குள் போக வேண்டாம்னு நினைக்கிறேன்.
படிச்சு முடிச்சதும் பல இடங்கள்ல வேலை பாத்திருக்கேன். ஆனாலும் டிவி அதுலயும் செய்தி மேல ஒரு கண் இருந்துட்டே இருந்தது. சன் டிவியில ஆடிஷன்னு தெரிஞ்ச ஒருத்தர் சொல்லி போனேன். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா செலக்ட் பண்ணினாங்க.
பொதுவா எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. எந்தவொரு நிகழ்ச்சி எங்க நடந்தாலும் போயிடுவேன். தொடர்புகளை வளர்க்கணும்கிறதுல பெரிய ஆர்வம். அந்த தொடர்புகளே அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்குச்சு. சன் டிவியில இருந்து பாலிமர் டிவிக்கு வந்தேன்.

அங்க எனக்கு கிடைச்ச சுதந்திரம் ரொம்ப பெரிசு. பொதுவா சேனல்கள்ல செய்தி வாசிப்பு ஃப்ளாட்டா வாசிச்சா போதும்னுதான் நினைப்பாங்க. அந்த மீட்டரைத் தாண்டி ஏத்தியோ இறக்கியோ வாசிக்க முடியாது. ஆனா எனக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை. நான் சில மாடுலேஷன்கள்ல வாசிச்சப்ப ‘வித்தியாசமா இருக்கே’னு அதை அனுமதிச்சாங்க.
இன்னைக்கு நீங்க பாக்குற செய்தித் தொகுப்புகள் அப்படி ஆரம்பிச்சதுதான். ஒருகட்டத்துல அந்த செய்திகள் நல்ல வரவேற்பைப் பெறவே, அதையே ஃபாலோ செய்யச் சொல்லிட்டாங்க” என்றவரிடம்,