மும்பை மொஹர்ரம் ஊர்வலத்தில் விஷ மாத்திரைகள் விநியோகம்: 15,000 பேரைக் கொல்ல சதி செய்த நபர் கைது! | A person was arrested for distributing poisonous pills during the Muharram procession in Mumbai

Spread the love

மும்பையில் நடைபெற்ற மொஹர்ரம் ஊர்வலத்தின்போது, விஷ மாத்திரைகளை விநியோகம் செய்து ஆயிரக்கணக்கானோரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய நபரை மும்பை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

“மொஹர்ரம் ஊர்வலத்தைக் குறிவைத்து, எலி விஷமாகப் பயன்படுத்தப்படும் “சிங்க் பாஸ்பைடு’ (Zinc Phosphide) நிரப்பப்பட்ட மாத்திரைகளை விநியோகித்து, குறைந்தது 15,000 பேரைக் கொல்வதே எனது நோக்கம்” என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக NDTV தெரிவித்திருக்கிறது. இந்தப் பெரும் சதியை மும்பை காவல்துறை முறியடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரேம்ஜி

கைது செய்யப்பட்ட பிரேம்ஜி

பைகுல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்குச் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு நபர் மாத்திரைகளை விநியோகிப்பதைக் கவனித்து அவரைப் பிடித்தார்.

இதுகுறித்து மத்திய மண்டலம்-1-ன் துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் மீனா கூறுகையில், “அதிகாலை 4 மணியளவில், சல்மான் என்ற நபர் இந்த மாத்திரைகளில் ஒன்றை உட்கொண்டதால் வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு அடைந்தார். இந்தச் சம்பவத்தை முதலாகக் கொண்டு தீவிரமாகப் புலனாய்வு செய்த காவல்துறை, சந்தேக நபரான பிரேம்ஜியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *