`எதை வேண்டுமானாலும் செய்ய நீங்கள் என்ன கடவுளா?’ மகா., உணவுத்துறை அதிகாரி முண்டேயிக்கு ஐகோர்ட் கேள்வி

Spread the love

இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மும்பை கிரிக்கெட் அசோசியேசன் மனு மீதான தங்களது முந்தைய உத்தரவைப் பின்பற்றாததற்காக, நீதிமன்ற அவமதிப்புக்காக விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகதுறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து உணவு மற்றும் மருந்து ஆணையம் தனது நோட்டீஸை திரும்பப் பெற முன்வந்தது. எனவே பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள மும்பை கிரிக்கெட் அசோசியேசனில் செயல்படும் ஐந்து உணவகங்களின் உரிமங்கள் மீதான சஸ்பெண்டை ரத்து செய்தது.

“இது (இடைநீக்கத்தை ரத்து செய்வது) கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளிலும் நடக்கிறது,” என்று தலைமை நீதிபதி ஆர்.வி. குகே மற்றும் நீதிபதி கௌதம் அன்காட் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு கூறியது. அதோடு சஸ்பெண்ட் உத்தரவை வழங்கிய அதிகாரியின் பெயரை நீதிபதிகள் கேட்டனர். “நீதிமன்ற உத்தரவு உங்களுக்கு ஒன்றும் புரியவில்லையா? உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு இல்லையா?” என்று தலைமை நீதிபதி கேட்டார். மேலும், “நீங்கள் (FDA) என்ன கடவுளா. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக புனேயில் உள்ள சிப்லா பார்மா அண்ட் லைஃப் சயின்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் மருந்து விற்பனை உரிமத்தை ரத்து செய்த உத்தரவை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை திரும்பப் பெற்றது. இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை வரம்பு மீறி செயல்பட்டதாகவும், அதிகாரத் தோரணையில் நடந்துகொண்டதாக பொறுப்பு தலைமை நீதிபதி ரவீந்திர குகே மற்றும் நீதிபதி கௌதம் அங்கத் ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாக விமர்சித்து இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *