அடுத்தடுத்து வந்தவர்களும் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். தினேஷ் ராஜ் தனது பங்கிற்கு 32(18) ரன்கள் எடுத்து தந்து பின் அவரும் டாட்டா சொல்லிச் செல்ல 19.3 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை இலக்காக வைத்தது. கோவை கிங்ஸ்-ன் பவுலர் ஆர்.எஸ்.அம்ரிஸ் 3 ஓவர்களுக்கு 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த பலம் தந்திருந்தார்.
பின் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியின் எஸ் ராதாகிருஷ்ணன் 3 சிக்சர் 3 பவுண்டரிகள் என ஒரு பவுசான ஓப்பனிங்கை கொடுத்து 38(18) ரன்களில் வெளியேறினார். பின் எஸ்.லோகேஸ்வரன் மற்றும் பி.சச்சினின் கூட்டணி 60 ரன்களை எடுத்து வலுபடுத்தியது. பின் பி.சச்சின் ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த ஷாருக்கான் 25(11) சிறிய மின்னல் ரன்களை காட்டி விட்டுச் செல்ல.. கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்று “பிளே ஆஃப்” செல்வதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
சிறப்பாக பவுலிங் வீசிய ஆர்.எஸ் அம்ரிஸ் “மேன் ஆஃப் தி மேட்ச்’ பெற்றார்.