இன்று (நவம்பர் 19 – அமெரிக்க நேரப்படி) அமெரிக்காவின் நாஸ்டாக் குளோபல் செலக்ட் மார்க்கெட்டில் ஏ.ஐ. நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் ஐ.பி.ஓ. வெளியாக இருக்கிறது.
இதன் சாதாரண ‘கிளாஸ் ஏ’ பங்குகளின் ஐ.பி.ஓ. விலை 83 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 98 கோடி பங்குகள் வெளியாக உள்ளன.
இதில் 95,63,51,354 பங்குகளை ஆந்த்ரோபிக் நிறுவனமும், மீதமுள்ள 2,36,48,646 பங்குகளை நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பங்குதாரர்களும் விற்பனை செய்கின்றனர்.

ஆந்த்ரோபிக் நிறுவனம் சந்தையில் பட்டியலிடப்படுவது குறித்து கேள்வி எழுப்பி கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் உதய் கோட்டக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘கிளாட்’ செயற்கை நுண்ணறிவு மூலம் அறியப்படும் ஆந்த்ரோபிக் நிறுவனம், 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படியொரு நிறுவனம் இருந்ததே இல்லை.
ஆனால் இன்று, இதன் மதிப்பு இந்தியாவின் முதல் 10 முன்னணி நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பை விட அதிகமாக உள்ளது.
நாம் குறைத்து மதிப்பிடப்படுகிறோமா, அல்லது இந்தப் புதிய உலகிற்கு ஏற்ப நாம் இன்னும் வேகமாக முன்னேற வேண்டியிருக்கிறதா? இல்லை, இரண்டுமேவா?