என்னடா 26 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகுறீங்க.. ஆர்சிபியையே மிஞ்சிட்டீங்க.. திலக் வர்மாவிடம் வீழ்ந்த நேபாள் | Nepal All Out for 26 Against India A as Prince Yadav, Harshit Rana Shine; RCB Fans Elated

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

தோஹா: வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா ஏ அணியிடம் வெறும் 26 ரன்களுக்கு நேபாள் அணி ஆல் அவுட்டாகி இருக்கிறது. பிரின்ஸ் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பிரமிக்க வைத்துள்ளனர். இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தாலும், அந்த அணிக்கு ஆறாத வடுவாக 49 ரன்கள் ஆல் அவுட் போட்டி இருந்து வருகிறது. விராட் கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்டோர் இருந்த போதும், ஆர்சிபி அணி 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனை வைத்து சிஎஸ்கே மற்றும் மும்பை ரசிகர்கள் ஆர்சிபி அணியை கிண்டல் செய்வார்கள்.

RCB

தற்போது ஆர்சிபி அணியின் சாதனையை மிஞ்சும் அளவிற்கு நேபாள் ஏ அணி செயல்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா ஏ அணியை எதிர்த்து நேபாள் ஏ அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி திலக் வர்மா மற்றும் குமார் குசாக்ரா ஆகியோரின் அபார சதம் காரணமாக 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்களை குவித்தது.

சிறப்பாக ஆடிய குமார் குசாக்ரா 102 பந்துகளில் 117 ரன்களையும், கேப்டன் திலக் வர்மா 113 பந்துகளில் 107 ரன்களையும் எடுத்தனர். கடைசி நேரத்தில் சூர்யான்ஷ் ஷெட்கே 14 பந்துகளில் 36 ரன்களை விளாசி அசத்தினார். இதன்பின் நேபாள் அணி களமிறங்கியது. வெறும் 2.2 ஓவர்களில் 1 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை நேபாள் அணி இழந்து அதிர்ச்சி கொடுத்தது.

ஒரு கட்டத்தில் இது கால்பந்து ஸ்கோர் கார்டு போல என்று சந்தேகம் வரும் அளவிற்கு ஆட்டம் சென்று கொண்டிருந்தது. ஒரு பக்கம் ஹர்சித் ராணா, மறுபக்கம் பிரின்ஸ் யாதவ் இருவரும் இடியாய் இடித்து கொண்டிருந்தனர். இறுதியாக வெறும் 11.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு நேபாள் அணி ஆல் அவுட்டாகியது. மொத்தமாக 5 வீரர்கள் டக் அவுட்டாகினர்.

இந்தியா ஏ அணி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 5 ஓவர்களில் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்சித் ராணா 6 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், ஷாபாஸ் அஹ்மத் 3 பந்துகளில் 1 விக்கெட்டை கைப்பற்றினார். இந்திய அணியின் இந்த வெற்றி ஆர்சிபி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *