“என்னுடைய தந்தை என்னை ஒரு உண்மையான மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்!” -மம்மூட்டி |”My father wished to see me as a true doctor!” — Mammootty

Spread the love

டாக்டர் பட்டம் பெற்றபின் மேடையில் பேசிய மம்மூட்டி, “என்னுடைய தந்தை என்னை ஒரு உண்மையான மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனால், அவர் உயிரோடு இருந்தபோது என்னால் அவரது ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இன்று எனக்குக் கிடைத்திருக்கும் மூன்றாவது டாக்டர் பட்டம் இது. என்னால் மருத்துவ ரீதியாக மக்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் போயிருக்கலாம்.

ஆனால், கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக எனது திரைப்படங்கள் மூலமாக உங்களை மகிழ்வித்து, உங்களது மனங்களைக் குணப்படுத்தி வருகிறேன் என்று நம்புகிறேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இதை நான் தொடர்ந்து செய்வேன்” எனப் பேசியிருக்கிறார்.

Mammootty - Viswanath Arlekar

Mammootty – Viswanath Arlekar

இதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்திலும், “மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மறக்க முடியாத பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இது நடிகர் மம்மூட்டிக்கு மூன்றாவது டாக்டர் பட்டம். இதற்கு முன் கேரளப் பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்தும் கடந்த 2010-ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *