“என்னை ஒரு கலைஞனாகச் செதுக்கியவர்” – இயக்குநர் சிங்கீதம் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்! | Actor Kamal Haasan has condolences the Director Singeetham.

Spread the love

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு வயது 95.

வயது மூப்பு காரணமாக இவர் இயற்கை எய்தியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. இவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கீதம் சீனிவாசராவ்

சிங்கீதம் சீனிவாசராவ்

இயக்குநரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்தார். அப்போது, “எங்களுடையது நீண்ட கதை கொண்ட ஒரு பெரிய நட்பு. எங்களின் இந்த நட்பைச் சொல்வதற்கு வயது ஒரு பொருட்டே அல்ல. வயது வித்தியாசம் இருந்தாலும், எங்களுக்குள் இருந்த உறவு அத்தகையது. “இளமையில் மரணம் என்பது மிகவும் பெரிய சோகம்’ என்று சொல்வார்கள். சிங்கீதம் அந்த இளமையோடுதான் மாண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவருடைய உடம்பு மட்டும்தான் பழசானது, அவ்வளவுதான்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *