கைநிறைய சம்பளத்தில் வேலை வேண்டுமா? மாணவர்களுக்கு துபாய் பத்திரிகையாளர் சொன்ன முக்கிய வழிகள்! | Want a High-Paying Job in India & Abroad? Dubai Journalist Shares Golden Career Tips at Ilayangudi College

Spread the love

Tamilnadu

oi-Shyamsundar I

இளையான்குடி: கல்லூரிப் படிப்பை முடித்ததும் மாணவர்கள் எப்படிப்பட்ட வேலைகளைத் தேர்ந்தெடுக்கலாம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து விளக்கும் சிறப்புக் கருத்தரங்கு, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமைந்துள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது.

இக்கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், துபாயைச் சேர்ந்த பிரபல மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.

Dubai

மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள்:

கருத்தரங்கில் பேசிய முதுவை ஹிதாயத், இன்றைய காலகட்டத்தில் வெறும் பட்டப்படிப்பு மட்டுமே வேலை பெற்றுத் தராது என்பதைச் சுட்டிக்காட்டினார். இன்றைய நவீன கார்ப்பரேட் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தேடும் மொழித்திறன், கணினி அறிவு, தகவல் தொடர்புத் திறன் மற்றும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் ஆகியவற்றை மாணவர்கள் கல்லூரிப் பருவத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வணிகவியல் மாணவர்களுக்குக் கணக்கியல், நிதி மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தளவாடப் போக்குவரத்து (Logistics) போன்ற துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமும், நேர்காணல்களைத் துணிவுடன் எதிர்கொள்வதன் மூலமும் மாணவர்கள் தங்களின் வெளிநாட்டுக் கனவை எளிதாக நனவாக்க முடியும் என்று அவர் விளக்கினார்.

Dubai

சிறப்பு கௌரவிப்பு:

மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் ஆலோசனைகளை வழங்கிய துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்திற்கு, கல்லூரியின் துணை முதல்வர் பேரா. டாக்டர் கே. நைனா முஹம்மது பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் எஸ். நாசர், பேராசிரியர் எம். அப்பாஸ் உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், துறை விரிவுரையாளர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் அமைந்த இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *