இதில் நடித்திருக்கக்கூடிய அனைவரையுமே அந்தந்தக் கதாபாத்திரத்திற்குத் தகுதியானவர்களாகவே இயக்குனர் தேர்வு செய்தாரே தவிர, இதில் எந்த நடிகருக்கு மார்க்கெட் இருக்கிறது என்றெல்லாம் பார்க்கவில்லை. என்னை வைத்து 7 கோடி ரூபாய்க்குப் படம் எடுக்கச் சினிமா தெரிந்த யாரும் வரமாட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர் ஜித்தேஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் தைரியமாக முன்வந்து இந்த கதையை நம்பிப் படம் எடுக்க வந்தார்கள். அவர்களிடம் “எனக்கு இங்குப் பெரிய வியாபாரம் கிடையாது. நீங்கள் ஆர்வக் கோளாறில் படம் எடுத்துவிட்டு, கடைசியாகக் கருணாஸை வைத்துப் படம் எடுத்து நஷ்டம் ஆகிவிட்டது என்று என் மீது குற்றம் சொல்லக் கூடாது” என்றேன்.
அதற்குப் பிறகு, “தம்பி, இது உண்மையிலேயே நல்ல கதை. இயக்குனர் சஜீவ் இதில் எழுப்பியுள்ள கேள்வி, இந்திய சினிமாவிலேயே இதுவரை யாருமே கேட்காத ஒரு கேள்வி. அதைப் படம் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள். கதையை நம்பி வந்த நீங்கள் ஏன் வியாபாரத்தைப் பற்றி யோசிக்கிறீர்கள்?” என்று பேசி, மீண்டும் அனைவரையும் ஒன்றிணைத்துச் படப்பிடிப்புக்குச் சென்றோம்.