இந்து அமைப்பினர் வருகையால் வெடித்த சர்ச்சை.. ஊழியர்கள் ஸ்டிரைக்! மூடப்பட்ட பாரிஸ் ஈபிள் டவர் | Paris Eiffel Tower shuts after strike of employees for Women Staff Sidelined For Hindu Group Visit

Spread the love

International

oi-Mani Singh S

பாரீஸ்: பிரான்சில் உள்ள ஈபிள் டவரை பார்வையிட இந்து அமைப்பினர் வருகை தந்த போது, அங்கு இருந்த பெண் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈபிள் கோபுரம் தற்காலிகாக மூடப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்து அமைப்பான போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS)வை சேர்ந்த 100 பேர் ஈபிள் டவருக்கு கடந்த சனிக்கிழமை சென்றுள்ளனர்.

Paris Eiffel Tower shuts after strike of employees for Women Staff Sidelined For Hindu Group Visit

ஊழியர்கள் வேலைநிறுத்தம்

இவர்கள் வருகையின் போது ஈபிள் டவரில் பணி செய்யும் பெண் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈபிள் டவர் நிர்வாகத்தின் இந்த செயல் பிரான்சில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்து குரல் கொடுத்த நிலையில், ஈபிள் டவரில் பணியாற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஈபிள் டவர் சிறிது நேரம் மூடப்பட்டது. பின்னர் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஈபிள் டவர் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் சங்க பிரதிநிதி டியான் டவோயின் கூறியதாவது:- இந்து அமைப்பை சேர்ந்த பிரதிதிகள் வருகை தரும் போது, தங்கள் பணியிடத்தில் இருந்து பெண் ஊழியர்கள் வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

என்ன நடந்தது?

வார இறுதி நாளில் ஏற்பட்ட இந்த நிகழ்வு ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, திங்கள் கிழமை கூட்டம் நடைபெற்றது. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், இனிமேல் நிறுவனத்தில் பெண்கள் இதுபோன்ற முறையில் நடத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது” என்றார்.

இந்த கூட்டத்திற்காக ஊழியர்கள் திரண்டதால் ஈபிள் டவர் திறப்பு தாமதம் ஆனது. செயல்பாட்டு காரணங்களுக்காக நினைவுச்சின்னம் திறப்பு தாமதம் ஆகியுள்ளதாக அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. பாரீஸ் புறநகரில் இந்து கோவில் திறப்பு விழா நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று இந்த கோவிலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்து அமைப்பினர் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

பாரிஸ் மேயர் பதில்

அப்போதுதான் பிரான்ஸ் ஈபிள் டவர் சென்று இருக்கிறார்கள். இந்து அமைப்பினர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே பெண் ஊழியர்கள் சிறிது நேரம் பணியிடத்தில் இருந்து வெளியேற்றபப்ட்டதாக ஈபிள் டவர் பணிகளை நிர்வாகம் செய்து வரும் தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. சர்ச்சையை கிளப்பிய இந்த சம்பவம் தொடர்பாக பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரேஜியோர் கூறும் போது, சம்பவம் தொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *