‘என் அத்தை மற்றும் கணவர் கொல்லப்பட்ட சம்பவங்களை என்னால் எழுதவே முடியவில்லை!’- சோனியா காந்தி எமோஷனல் | Sonia Gandhi speech at Belonging: A Journey of Love book event

Spread the love

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்​கப்​பட்டு கடந்த நவ.10-ம் தேதி இந்​தியா முழு​வதும் விற்​பனைக்கு வந்​தது.

இதன் அதி​கார​பூர்வ வெளியீட்டு விழா டெல்​லி​யில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்றிருக்கின்றனர்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, ” குடும்பத்தை பற்றி வெளியே பேசுபவை உண்மையற்றவை. எனது உணர்வுகளை இந்த நூலின் வாயிலாகவே வெளிக்கொணர்ந்துள்ளேன். நினைவில் இருந்தவற்றை மட்டுமே எழுதியுள்ளேன். டைரி எழுதாமல் விட்டது நான் செய்த பிழை. இந்தியப் பெண் என்ற உரிமையைப் பெற போராடினேன். இந்த சுயசரிதை நூலுக்கு மக்களிடம் அமோக ஆதரவு இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *