இந்தச் சூழலில் நெய்வேலி போலீஸார், சுரேஷ் கண்ணாவை கைது செய்தனர். அப்போது அவரிடம் விசாரித்தபோது ஸ்ரீராம் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கின் பின்னணி தகவல் தெரியவந்தது. அதுகுறித்து நெய்வேலி போலீஸார், கடலூர் எஸ்.பி-க்கு தகவல் தெரிவித்தனர். அவர்மூலம் டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வாலின் கவனத்துக்கு போக்சோ வழக்கு பதிவு செய்ய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியும் காவலர் வசந்த் ராஜாவும் 5 லட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கின் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டது. அந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவலர் வசந்த் ராஜா ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உறுதியானது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, காவலர் வசந்த்ராஜா ஆகியோரை கமிஷனர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸாரிடம் விசாரித்தபோது,
“திருமணத்துக்கு தடையாக இருந்த ஸ்ரீராமை பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய சுரேஷ் கண்ணா பிளான் போட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து காவலர் வசந்த்ராஜாவைச் சந்தித்த சுரேஷ் கண்ணா, ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொடுத்திருத்திருக்கிறார். அதன்பிறகுதான் ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புகார் கொடுத்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சில தகவல்கள் தெரியவந்திருக்கிறது. சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து விட்டு போக்சோ வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”‘ என்றனர்.