சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய த.வெ.கவினர் கைது – கட்சி பதவி பறிப்பு – tvk cadres arrested in woman harrassment case

Spread the love

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது பைக்கில் ஹோட்டலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ஹோட்டல் செக்யூரிட்டியிடம் விவரத்தைக் கூறியிருக்கிறார். உடனே ஆபாசமாகப் பேசியவர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாரளித்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியது அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபுகுமார், (49), பாலாஜி (30) எனத் தெரியவந்தது.

பிரபுகுமார்

பிரபுகுமார்

அதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பிரபுகுமார், த.வெ.க-வில் செயற்குழு உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் பிரபுகுமாரின் கட்சிப் பதவியை கடந்த 5-ம் தேதியே பறித்துவிட்டதாக மாவட்ட தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. த.வெ.க-வின் முன்னாள் நிர்வாகி பிரபுகுமார், ஆதரவாளர் பாலாஜி ஆகியோருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் த.வெ.க நிர்வாகிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *