“என் இறுதி மூச்சு வரை தவெக-வில் பயணிப்பேன்" – விஜய் உடன் இணைந்த மன்சூர் அலிகான் உருக்கம்!

Spread the love

பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிகாரபூர்வமாக அந்தக் கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரருமான தவெக-வின் விளையாட்டு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் மூத்த, பலம்பெரும் தலைவர்களின் முன்னிலையில் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த இயக்கத்தோடுதான் என் பயணம் தொடரும்.

மன்சூர் அலிகான்

நான் தவெக-வில் இணைய வருகிறேனா என்று பலரும் கேட்கிறார்கள். ‘பிரிந்திருந்தால் தானே மீண்டும் இணைவதற்கு?’. தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே, ‘லியோ’ திரைப்பட வெற்றி விழாவில், நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து, ‘தமிழகத்தின் ஒரே மாற்றுத் திறவுகோல், நாளைய தீர்ப்பு விஜய் தான்’ என்று நான் அன்றே பிரகடனப்படுத்தியவன். சூழ்நிலை காரணமாக தற்போது தலைவரை (விஜய்) நேரில் சந்திக்க இயலவில்லை.

இன்னும் ஓரிரு நாள்களில் அவரை நேரில் சந்திப்பேன். நாளைய தமிழகம், இன்றைய தமிழகம் என எப்போதும் தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றப் பாதையில் பயணிக்கவும், ஆண்டாண்டு காலம் வெற்றியை நோக்கி நடைபோடவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். தமிழக அரசியலில் நிச்சயமாக மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். தமிழகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *