நான் முதல்வன் திட்டம்  பெயர் மாற்றம் பதிவுகள் நீக்கம்: ஸ்டாலின் வேதனை  – Kumudam

Spread the love

நான் முதல்வன் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் திறன் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த இணையதளத்தில் மே 15 முந்தைய பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிலு செய்துள்ளனர். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. 

அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன. கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!. என பதிவிட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *