'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' – சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்

Spread the love

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்திருக்கிறார்.

தவெக வேட்பாளர் சத்யபாமா நேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு போனில் அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து ராஜ்மோகன் தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் ஒரு தகவலை பரிமாறி கொண்டார்.

முதல்வர் விஜய் - சத்தியபாமா
முதல்வர் விஜய் – சத்தியபாமா

அதன்பிறகு தான் அவர் அழுது கொண்டே பேச தொடங்கினார், இவை எல்லாம் ஒரு நாடகம் என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழியும் ‘இதற்கு முன் இப்படி ஒரு விமர்சனத்தைப் பார்த்தது இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விளக்கம் அளித்த ராஜ்மோகன், ” திமுக எம்.பி கனிமொழி அவர்களின் கருத்து மிகப்பெரிய வன்மம். அவர்கள் சொன்னதை கேட்டு நான் அதிர்ச்சி அடைகிறேன். இதற்கு நான் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தாராபுரம் மேடையில் அமைச்சர் அருண்ராஜ் பேசும் போது முதல்வர் நின்று கொண்டிருக்கிறார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள்.

அதனால் அவரிடம் விரைவாக பேசுமாறு கேட்டுக்கொண்டேன். சத்யபாமா அவர்கள் பேசும் போதும் இதை தான் சொன்னேன். மக்களும் வெயிலில் வெகு நேரம் காத்திருந்தனர், முதலமைச்சரும் மேடையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் விரைவாக பேசுமாறு (Make it fast) என்று தான் கேட்டு கொண்டேன்.

முதல்வர் விஜய் - சத்தியபாமா
முதல்வர் விஜய் – சத்தியபாமா

என் தாயின் மீது ஆணையாகச் சொல்கிறேன். மேடையில் நடந்தது இதுதான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்கட்சிகள் திரித்து பேசுவதையும் ஆதாரம் இல்லாமல் சொல்வதையும் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *