ஐஐடி கரக்பூர் தனது 75-வது ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இந்தக் கல்வி நிறுவனத்தில் பயின்ற கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை தனது வாழ்த்து செய்தியை ஐஐடி கரக்பூருக்கு அனுப்பி இருக்கிறார்.
அதில், “ஹாரீஸ் உணவகத்தில் சாப்பிட்ட உணவுகள், இல்லு திருவிழா, B308 அறையில் இரவெல்லாம் படித்தது, நண்பர்களுடனான நட்பு மற்றும் பேராசிரியர்களின் வழிகாட்டுதல் என ஐ.ஐ.டி கரக்பூரின் பல நினைவுகள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன.

இந்த வளாகத்தில்தான் நான் எனது மனைவி அஞ்சலியைச் சந்தித்தேன். இங்குதான் முதன்முதலில் புரோகிராமிங் செய்யக் கற்றுக்கொண்டேன் மற்றும் கணினியைப் பயன்படுத்தும் முதல் வாய்ப்பையும் பெற்றேன்.