ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உறவிலிருந்தும் பிரிவதாக மீரா அறிவித்தார். தனது மூன்று திருமணங்களுமே கசப்பான அனுபவங்களைக் கொடுத்த நிலையில் இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
“நான் என் மகனிடம் அடிக்கடி சொல்வேன்…மூன்று முட்டாள்தனமான திருமணங்களால் என் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன். அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக வேலை செய்திருந்தால் நான் இன்னும் பல சாதனைகள் செய்திருக்கலாம்.

சினிமா, உடற்பயிற்சி அல்லது எனக்காக ஒரு சிறந்த சமூக வட்டத்தை உருவாக்குவது போன்ற நான் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
என் வாழ்க்கையில் நான் இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க முடியும், ஆனால் என்னால் முடியவில்லை. என் தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டிருக்கலாம்.
அதற்குப் பதிலாக, அந்த நேரத்தை மற்றவர்களுக்காக வீணடித்துவிட்டேன். என்னை ஒருபோதும் மதிக்காத அல்லது என்னைப் பொருட்டாகவே நினைக்காத மனிதர்களுடனான உறவுகளுக்காக, நான் மிக அதிகமான நேரத்தை வீணாக்கிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.