Ronaldo: "எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது" – ரொனால்டோ உருக்கம்

Spread the love

சவுதி ப்ரோ லீக்கில் அல் ஆலி அணியை வீழ்த்திய பிறகு அல் நசார் க்ளப் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கால்பந்து விளையாடுவது குறித்து பேசிய ரொனால்டோ, “எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது. இந்தத் தலைமுறைக்காக மட்டுமல்ல, கடந்த தலைமுறைக்காகவும், வரப்போகும் தலைமுறைக்காகவும் தொடர்ந்து விளையாடுகிறேன்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவை நான் நெருங்கினாலும், ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்து விளையாடுகிறேன். இந்த லீக் தொடரை வெல்ல நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம்.

என்னுடைய ஒரே குறிக்கோள் கால்பந்து விளையாடுவதும், கோப்பைகளை வெல்வதும்தான். நான் எங்கு சென்றாலும் வெற்றிகளைப் பெறவே விரும்புகிறேன்.

நான் சாதனைகளைத் தேடிச் செல்வதில்லை, சாதனைகள்தான் என்னைத் தேடி வருகின்றன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ

நான் ஏற்கனவே கால்பந்து வரலாற்றில் எனது முத்திரையைப் பதித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.

இப்போது நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை, தற்போதைய தருணத்தை ரசிக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *