எப்போதும் கேட்ச் பிடிக்கும் போப் லியோ.. இந்த முறை மிஸ் ஆன ஜெபமாலை.. கண்ணில் பட்டதால் பரபரப்பு! | Pope Leo XIV Misses Rosary Thrown by Crowd, Gets Hit Near Eye in Peru, What happened to Pope

Spread the love

International

oi-Vigneshkumar

லிமா: கூட்டத்தில் இருந்து வீசப்படும் பொருட்களை லாவகமாக பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வந்த போப் ஆண்டவர் 14ம் லியோ இந்த முறை தன்னை நோக்கி வீசப்பட்ட ஜெபமாலையை கேட்ச் செய்ய முடியாமல் விட்டுவிட்டார். அது இவரது கண்ணுக்கு அருகே வந்து பட்டுள்ளது. பிரியாவிடை திருப்பலியின் போது கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட ஜெபமாலை அவரது கண்ணுக்கு அருகே பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் பேரணி செல்லும்போது கூட்டத்தில் இருந்து அவர்களை நோக்கி பொருட்களை வீசும் சம்பங்கள் அதிகரித்து வருகிறது. பாசமிகுதியில் அவர்கள் தங்களிடம் இருக்கும் சின்ன சின்ன பொருட்களை வீசுகிறார்கள். இருப்பினும், அது சில நேரங்களில் காயத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Pope leo pope

சுற்று பயணம்

போப் ஆண்டவர் லியோ, தென் அமெரிக்க நாடுகளுக்கு 12 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பெரு நாட்டில் 6 நாட்கள் தங்கியிருந்தார். திங்கள்கிழமை தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் ரோம் திரும்புவதற்கு முன்பாக, லிமாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற பிரியாவிடை திருப்பலியில் பங்கேற்கச் சென்றார்.

அப்போது போப் ஆண்டவர் பயணித்த போப்மொபைல் வாகனத்தை சுற்றி ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். வழிநெடுகிலும் அவரை பார்த்து மகிழ்ச்சியடைந்த மக்கள், தாங்கள் வைத்திருந்த பொருட்களை அவரை நோக்கி வீசினர். வழக்கம்போல அதில் சில பொருட்களை போப் லியோ பிடிக்க முயன்றார். இருப்பினும், ஒரு பொருள் மட்டும் மிஸ்ஸாகிவிட்டது.

ஜெபமாலை

கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட ஜெபமாலையை அவர் பிடிக்க முயன்ற நிலையில், அது அவரது கண்ணுக்கு அருகே வந்து பட்டது. கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் ஜெபமாலையை போப் ஆண்டவர் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காக இதுபோல அவரை நோக்கி வீசுவது வழக்கம். அப்படி வீசப்பட்ட ஒரு ஜெபமாலை தான் அவர் மீது பட்டு இருக்கிறது.

ஜெபமாலை ஓரளவுக்கு நல்ல வேகத்திலேயே இவரது முகத்தில் பட்டுள்ளது. இதனால் போப் சிறிது நேரம் தனது கண்ணை தேய்த்து கொண்டே இருந்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அவருக்கு காயம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தொடர்ந்து அவர் பிரியாவிடை திருப்பலியிலும் பங்கேற்றார். பெரு நாட்டில் தனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் நன்றி தெரிவித்த போப், பெரு தனது தாய்நாடு போன்றது என்றும் குறிப்பிட்டார்.

71 வயதான போப் லியோ

71 வயதான போப் லியோவுக்கு டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் அதிகம். இந்த வயதிலும் வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர். எப்போதும் கூட்டத்தில் இருந்து வீசப்படும் பொருட்களை லாவகமாக பிடிப்பது அவரது தனித்துவமாக பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு ரோமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின்போதும், வாகனத்தில் இருந்தபடி கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட பொருளை பிடிக்க முயன்றார். அப்போது பின்னால் இருந்த ஒளிப்பதிவாளரின் மீது மோதினார். இதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்பு அவர் தன்னை நோக்கி வீசப்பட்ட பொம்மைகள், கொடிகளை எல்லாம் லாவகமாக பிடித்துள்ளார். அவ்வளவு ஏன், ஒரு முறை ரோமில் பீட்சா அவரை நோக்கி வீசப்பட்ட போது அதையும் கூட அவர் சரியாக பிடித்தார். ஆனால், இந்த முறை தான் ஜெபமாலை மிஸ்ஸாகி, அது கண்ணுக்கு அருகே பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *