“என் அம்மா மூன்று முறை புற்றுநோயை எதிர்கொண்டவர், ஆனால்.!” – சோனியா காந்தி குறித்து ராகுல் எமோஷனல்| rahul gandhi emotional speech at soniya gandhi book event

Spread the love

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) எனும் சுயசரிதை நூலாகத் தொகுக்​கப்​பட்டு நவ.10-ம் தேதி இந்​தியா முழு​வதும் விற்பனைக்கு வந்​தது.

இந்நிலையில் நேற்று டெல்லி நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்வில் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. இதில் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே சிவக்குமார், அகிலேஷ் யாதவ் உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்றிருந்தனர்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, “எனது அம்மா மூன்று முறை புற்றுநோயை எதிர்கொண்டு மீண்டவர். ஆனால், அவர் எப்போதும் அதைப் பெரிதாகக் காட்டிக்கொண்டதில்லை. அவர் பயப்படுவதையோ, எந்தச் சூழலிலும் பின்வாங்குவதையோ நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அப்பா, அம்மாவை மிகவும் நேசித்தார்.

இன்று அம்மாவைப் பார்த்து அவர் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார். எங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மிகப்பெரிய இழப்புகள் நிகழ்ந்தன. எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், எங்களின் மிகப்பெரிய வழிகாட்டியான எனது தந்தையும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *