எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா? | Vijayabaskar has resigned from his MLA post.

Spread the love

அதாவது, “தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை நேரில் சந்தித்து தனது விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த விஜயபாஸ்கர் இதுவரை 4 முறை எம்எல்ஏ- வாக இருந்திருக்கிறார்.

சி விஜயபாஸ்கர்

சி விஜயபாஸ்கர்

கொரோனா பெருந்தொற்று பரவியபோது, சுகாதாரத்துறை அமைச்சராக தினசரி செய்தியாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலமும், களப்பணிகள் மூலமும் தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து திருச்சி கிழக்கையும் சேர்த்து மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கும் விஜயபாஸ்கர், தவெக-வில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *