“எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்: வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல” – மாணிக்கம் தாகூர்| “Poor MLA Arul Vignesh: It is not right to raise questions based on rumors” – Manickam Tagore

Spread the love

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

அவரின் பதில், “காவல்துறையைப் பொறுத்தமட்டிலும், நீண்டகாலமாக அது அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் குடும்பங்களின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்திருக்கிறது. இந்த நிலையிலிருந்து காவல்துறை முற்றிலும் விடுவிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களில் இந்தத் தீபாவளி அன்று மட்டும்தான் கொலைகள் நடந்திருக்கின்றன என்பது போல கட்டமைக்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று 10 கொலைகள் நடந்திருக்கின்றன.

மாணிக்கம் தாகூர்

மாணிக்கம் தாகூர்

கடந்த ஆண்டு 6 கொலைகள், இந்த ஆண்டு 8 கொலைகள் நடந்திருக்கின்றன. இத்தகைய புள்ளிவிவரங்கள் காவல்துறையின் பொறுப்பும், கடமையும் பலமடங்கு அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பும் கடுமையான நடவடிக்கை முறைகளும் மிக அவசியம் என்பதை இந்நிலைமை உணர்த்துகிறது. நயினார் நாகேந்திரன் “தீபாவளியில் 15 கொலைகள் நடந்துவிட்டதால் முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று அவர் கூறுவது விசித்திரமாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *