எலான் மஸ்க் காட்டிய படம்.. ஆடிப்போன முகேஷ் அம்பானி.. சுடசுட அறிவித்த புது திட்டம்! | Reliance Jio to Launch 1,600 Satellites: Mukesh Ambani Enters Space Race with LEO Constellation

Spread the love

Business

oi-Prasanna Venkatesh

தொலைத்தொடர்பு, எண்ணெய், ரீடைல் வணிக துறைகளில் ஆதிக்கம் செலுத்திய ரிலையன்ஸ், இப்போது நேராக விண்வெளி வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் ஒரேயொரு டிரில்லியனரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஸ்டார்லிங்க் மூலம் உருவாக்கிய விண்வெளி வர்த்தக மாடல் சமீபத்தில் நடந்த ஐபிஓ வெற்றி மூலம் உலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் ஸ்பேஸ்எக்ஸ் இன்னும் 28 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளை கொண்டு இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்த நிலையில், இத்துறையில் பலர் இறங்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இதே பாதையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் களமிறங்கத் தயாராகியுள்ளார்.

Reliance jio mukesh ambani Reliance Jio satellite project Mukesh Ambani space business LEO satellite constellation India Reliance Jio 1600 satellites IN-SPACe approval Starlink India competition Mukesh Ambani Elon Musk Reliance satellite broadband India private satellite launch Jio space technology 2026 LEO 1600 IN-SPACe 2026

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்வெளி துறையில் பெரும் வெற்றியை ஐபிஓ மூலம் பெற்றுள்ளது. இதில் பெரிய அளவில் இன்ஸ்பையர் ஆன முகேஷ் அம்பானி அதே பாதையில் நுழைய தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ, தனது சொந்த லோ எர்த் ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள் தொகுப்பை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவில் முதன்முறையாக ஒரு தனியார் நிறுவனம் இந்த துறையில் நுழைவதாகும்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ, அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 1,600 முதல் 1,650 வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் சுமார் 650 கிலோமீட்டர் உயரத்தில் வைக்கப்படவுள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் அதிவேக இணைய சேவை மற்றும் நேரடி சாதன சேவைகளை வழங்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவை ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான IN-SPACe-க்கு சமர்ப்பித்துள்ளது. தற்போது இந்த முன்மொழிவின் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் கட்டமைப்பு குறித்து IN-SPACe ஆய்வு செய்து வருகிறது.

1,600 செயற்கைக்கோள்கள் திட்டம்

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முதல் தனியார் நிறுவனமாக LEO செயற்கைக்கோள் தொகுப்பை அமைக்கும். தற்போது உலகளவில் இந்த பிரிவை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஸ்டார்லிங்க் தற்போது சுமார் 10,000 செயற்கைக்கோள்களை விண்ணில் கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த நடவடிக்கை, இந்தியாவில் விண்வெளி தொழில்நுட்பத் துறையில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வெறும் இணைய சேவை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறையிலும் ரிலையன்ஸ் நுழைவதற்கான முதல் படியாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இது ரொம்ப முக்கியம்

இந்தத் திட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பல நாடுகள் தற்போது வெளிநாட்டு செயற்கைக்கோள் சேவைகளைச் சார்ந்திருப்பதை குறைக்க முயற்சித்து வருகின்றன. தேசிய பாதுகாப்பு காரணங்களால் உள்நாட்டு தொழில்நுட்பங்களை வளர்க்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த முயற்சி, இந்தியாவை விண்வெளி தொழில்நுட்பத்தில் சுயசார்பு நோக்கி நகர்த்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இந்தியா தனது சொந்த செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கும் திறனைப் பெறும். இது எதிர்காலத்தில் நாட்டின் டிஜிட்டல் இணைப்பு மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இந்த நடவடிக்கை, முகேஷ் அம்பானி தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விண்வெளி துறைக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க்கின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும் இந்த புதிய துறையில் தீவிர ஆர்வம் காட்டுவது, இந்தியாவில் new chapter-ஐ திறந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *