பெயர்களை தவறாக உச்சரித்ததற்கு மன்னிப்பு கேட்ட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! |Governor Rajendra Vishwanath Arlekar apologizes for mispronouncing names!

Spread the love

சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்ற பிறகு, முதல்வராக விஜய் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு ஆகியவை நடைபெற்றன. சட்டமன்றத்தில் தவெக அரசு, பெரும்பான்மையை நிரூபித்த பிறகு சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு முதலாவது சட்டபேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

தற்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை நிகழ்த்துகையில், தமிழக அரசின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் பெயர்களைத் தவறாக உச்சரித்தார்.

இவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு முடித்த பிறகு, தவறான உச்சரிப்பிற்கு ஆளுநர் மன்னிப்பும் கேட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *