எவ்வளவு தொகை கையில் இருந்தால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடையலாம்? Download Free SWP Calculator | calculate-your-financial-independence-amount-SWP-Calculator-tamil

Spread the love

நாம் அனைவரும் வாழ்வில் ஒரு கட்டத்தில் நிதிச் சுதந்திரத்தை (Financial Freedom) அடைய விரும்புகிறோம். ஆனால், நிஜமான நிதிச் சுதந்திரம் என்றால் என்ன? விலையுயர்ந்த கார், பெரிய வீடு, ஆடம்பரமான வாழ்க்கை… இவைதான் நிதிச் சுதந்திரமா?

‘தி சைக்காலஜி ஆஃப் மணி’ (The Psychology of Money) என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹௌசல் (Morgan Housel) இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு விளக்கத்தைத் தருகிறார்.

“பணம் தரும் மிகப் பெரிய டிவிடெண்ட், உங்கள் நேரத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் சுதந்திரம்தான்” என்கிறார் அவர்.

கண்களுக்குத் தெரியாததுதான் உண்மையான செல்வம்!

மார்கன் ஹௌசலின் கூற்றுப்படி, செல்வம் என்பது நாம் வாங்காத விலையுயர்ந்த கார்கள், அணியாத வைரங்கள் மற்றும் காட்டிக்கொள்ளாத ஆடம்பரங்களே. இவை பிறர் கண்ணுக்குத் தெரிவதில்லை!

பலரும் “நான் கோடீஸ்வரன் ஆக வேண்டும்” என்று சொல்வதன் உண்மையான அர்த்தம், “நான் ஒரு கோடி ரூபாயைச் செலவழிக்க வேண்டும்” என்பதுதான். ஆனால், பணத்தைச் செலவழித்து பொருள்களை வாங்குவது செல்வத்தைக் குறைக்கும் செயலே அன்றி, பெருக்குவது அல்ல.

உண்மையான செல்வம் என்பது வங்கிக் கணக்கிலும், முதலீடுகளிலும் இருக்கும் பணம். அது உங்களுக்குப் பொருள்களைத் தராது; மாறாக “விருப்பத்தேர்வுகளை’ (Options) தரும். நாளை நீங்கள் செய்யும் வேலை பிடிக்கவில்லை என்றால் தயக்கமின்றி விலகும் தைரியத்தை, உங்களுக்குப் பிடித்தமான தொழிலைச் செய்யும் வாய்ப்பை, குடும்பத்துடன் நேரம் செலவிடும் சுதந்திரத்தை அந்தப் பணம்தான் உங்களுக்குத் தரும். மார்கன் ஹௌசல் இதையே “தூய சுதந்திரம்” (Pure Independence) என்கிறார்.

நிதி சுதந்திரம்

நிதி சுதந்திரம்

எளிமையும் பொறுமையுமே வெற்றியின் ரகசியம்

நிதி உலகில் வெற்றி பெற மிகச் சிறந்த அறிவுத்திறன் தேவையில்லை; சரியான மனநிலையும் (Behavior) பொறுமையும்தான் தேவை. ஆடம்பரச் செலவுகளைச் சுருக்கி, அடிப்படைத் தேவைகளுக்குப் போக மீதமுள்ள தொகையைச் சேமிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை நாமே மாற்றியமைக்கலாம்.

கவர்ச்சிகரமான திட்டங்களில் சிக்காமல், நம்பகமான தகவல்களைத் தேடி, சந்தையின் ஏற்ற இறக்கங்களைக் கண்டு பயப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்யும் முன் அவசரம் கூடாது.

SIP முதல் SWP வரை: நிதிச் சுதந்திரத்துக்கான பயணம்

முதலீட்டுப் பயணம் என்பது எளிமையானது. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை, சுமார் 10-20% வரை, தொடர்ந்து நீண்ட காலத்திற்கு SIP (Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்து வர வேண்டும்.

SWP Benefits |Happy Retirement

SWP Benefits |Happy Retirement

நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தினால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தைப் பெற முடியும். கூட்டு வட்டியின் ஆற்றலால் (Power of Compounding) உங்கள் முதலீடு பல மடங்காகப் பெருகும்.

இப்படிப் பல ஆண்டுகள் பொறுமையாக முதலீடு செய்து சேர்க்கும் தொகையை, உங்கள் ஓய்வுக் காலத்தில் அல்லது உங்களுக்கு ஒரு மாற்று வருமானம் தேவைப்படும் காலத்தில் SWP (Systematic Withdrawal Plan) மூலம் பயன்படுத்தலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *