நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருக்கிறார்.
ஆனால் அவர் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 பேரின் ஆதரவு தேவைப்படும் சூழல் உள்ளது.
இதனிடையே எதிரெதிர் துருவங்களான திமுக-வும் அதிமுக-வும் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் திமுக – அதிமுக குறித்து விஜய் பிரசாரத்தில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசியிருக்கும் விஜய், ” “ஒன்னு நீ, இல்ல நான். நமக்குள்ள வேற யாரும் நடுவுல வந்திடக்கூடாது. நம்ம ரெண்டு பேரால மட்டும் தான் மக்களை ஈஸியா ஏமாத்த முடியும்.