தீர்க்கமுடியாத பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் மஹா பிரத்தியங்கிரா ஹோமம்… நீங்களும் சங்கல்பிக்கலாம்! | maha prathyangira homam event

Spread the love

இந்தத் தலத்தில் வாழ்ந்த மகான் – மா.கந்தசாமி சித்தர். இவர் வடபாதி பூமாது விருத்தம், வடபாதி ஆகாஷ கண்ணியம்மன் விருத்தம் ஆகியவற்றை இந்தத் தலத்து அம்பாள் மீது பாடியருளி இருக்கிறார்.

அதுமட்டுமா? காஞ்சி மஹாபெரியவா மஹா கும்பாபிஷேகம் செய்து தந்த திருத்தலம் இது. துர்கைச் சித்தரும் இங்கு வந்து பூஜித்து வழிபட்டுள்ளார். மட்டுமன்றி, தினமும் நள்ளிரவு 12 மணிக்கு தேவலோகக் கன்னிகள் இங்கு வந்து பூமாத்தம்மனை பூஜிப்பதாக ஐதிகம். ஆகவே, இந்தத் தலத்தில் இரவு தங்கினால் நன்மை உண்டாகும். இங்கே அதர்வண பத்ரகாளி உக்ர பிரத்தியங் கிரா தேவியும் அருள் பாலிக்கிறாள்.

அற்புதமான இந்தத் தலத்தில் உலக நன்மைக்காக மாதம்தோறும் அமாவாசை அன்று இரவு மஹா பிரத்யங்கிரா யாகம் நடை பெறுகிறது. அவ்வகையில் வரும் வைகாசி மாதம் அமாவாசை தினத்தில் – 16.5.2026 அன்று இரவு 7:30 முதல் 9:30 வரை நடைபெறும் யாகத்தில் நம் வாசகர்களும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து வழிபடலாம்.

வாழ்வில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிர்மறை சக்திகளையும் தீவினைகளையும் பொசுக்கும் அதீத சக்திமிக்க வழிபாடு மகா பிரத்தியங்கிரா ஹோமம். குறிப்பாக அமாவாசை தினங்களில் நிகழும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால், சகலவிதமான காரிய பலிதமும் உண்டாகும்.

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்னைகள், மனதை வாட்டும் குடும்ப கஷ்டங்கள் – பிரிவினைகள், தொழில் முட்டுக்கட்டைகள், தீவினைகளால் ஏற்படும் சங்கடங்கள் ஆகிய அனைத்தும் அன்னையின் அருளால் விலகும்.

மிக அற்புதமான புண்ணிய க்ஷேத்திரத்தில் நிகழவுள்ள சக்தி வாய்ந்த இந்த யாகத்தில் நீங்களும் சங்கல்பப் பிரார்த்தனை செய்து கலந்துகொள்ளலாம். மகா சக்தியாய் அருள்பாலிக்கும் அருள்மிகு பூமாத்தம்மனையும், அன்னை பிரத்தியங்கிராதேவியையும் மனதார வணங்கி அருள்பெற்றுச் சிறக்கலாம்.

வாசகர்கள் கவனத்துக்கு!

இந்த ஹோம வைபவத்துக்கு வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசேஷ ஹோமங்கள்-வழிபாட்டு சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், முறைப்படி ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

குறிப்பு : உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங் கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்; வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

மஹா பிரத்தியங்கிரா ஹோமத்தில் சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *