ஒரு கிலோ வெங்காயம் ரூ.35…. சென்னை ரேஷன் கடையில் தொடங்கிய விற்பனை..! – Kumudam

Spread the love

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால், கடந்த சில நாட்களாக வெளிச்சந்தையில் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும் வகையில் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்திருந்தார்.

அதன்படி, நகர்ப்புற ரேஷன் கடைகளில் இன்று முதல் வெங்காய விற்பனை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு அதிகபட்சமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் வழங்கப்படுகிறது. வெளிச்சந்தை விலையுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதால், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

வெங்காயத்தின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விலை உயர்வு கட்டுக்குள் வரும் வரை ரேஷன் கடைகள் மூலம் தொடர்ந்து குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *