கொளத்தூர் தேர்தல் முடிவு: ஸ்டாலின் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!|MK Stalin Kolathur Election Case HC Verdict

Spread the love

இந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.

ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாகத் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்

இதையடுத்து, ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்றவர்களை எதிர்த்து வழக்குத் தொடர வேண்டுமானால், தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

ஆனால், ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்ததோ, தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குப் பிறகு.

இதனால், ஸ்டாலின் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்யும்போது, 45 நாட்களுக்குள் வழக்குத் தாக்கல் செய்யாததற்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில், ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்ப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *