“ஒரு விளையாட்டு வீராங்கனையாக…” – பிரிஜ் பூஷண் சரன் சிங் குறித்து அச்சம்! – வினேஷ் போகத் | “As an athlete…” — Fear regarding Brij Bhushan Sharan Singh! — Vinesh Phogat

Spread the love

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் இருந்தபோது, அவர் மீது இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக், சுமித் மல்லிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முக்கிய மல்யுத்த வீராங்கனைகள் 2023-ம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ராஜினமா செய்ய வைக்கப்பட்டார். ஆனால், அவர்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

வினேஷ் போகத்

வினேஷ் போகத்

இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் கோட்டையாகக் கருதப்படும் கோண்டா மாவட்டத்தின் நந்தினி நகரில், மே 10 முதல் 12 வரை நடைபெறவுள்ள 2026 சீனியர் ஓபன் தரவரிசைப் போட்டி நடக்கவிருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள வினேஷ் போகத், நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “இப்போட்டி பிரிஜ் பூஷன் சிங் வசிக்கும் இடத்திலேயே போட்டி நடத்தப்படுகிறது. அங்கு அவருக்குச் சொந்தமான ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அங்கு மல்யுத்த வீரர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும் என்று நினைப்பது சாத்தியமற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *