Ram & Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா? | Vikatan’s review of the film ‘Ram & Leela’, starring Rio Raj.

Spread the love

கதாநாயகனாக முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் ரியோ ராஜ். ஆனால், ஸ்க்ரீனைப் பார்த்து மக்களிடம் முறையிடும் காட்சிகள், சில காமெடி மற்றும் எமோஷன் காட்சிகள் போன்றவற்றில் எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனத்தை களைந்திருக்கலாம். கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் நாயகி பாத்திரத்தை முடிந்தளவு சரியாக அணுகியிருக்கிறார் வர்த்திகா. சீரியஸ் அப்பாவாக சேத்தன் ஸ்கோர் செய்ய, மிகை நடிப்பில் சோதிக்கிறார் அம்மாவாக வரும் மாளவிகா அவினாஷ்.

Ram & Leela Review | ராம் & லீலா விமர்சனம்

Ram & Leela Review | ராம் & லீலா விமர்சனம்

பெண் வீட்டாரில் தீபா வெங்கட் பாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம். மா.கா.பா ஆனந்த் காமெடியில் கடுப்பேற்ற, மாமாவாக முனிஷ்காந்த், நாயகனின் தங்கையாக தாஃபியா அபு ஆகியோர் இருப்பைப் பதிவு செய்கின்றனர். முக்கியமானதொரு பாத்திரத்தில் நண்பர் ராமாக பாலாஜி தியாகராஜன் தயாளன்… ஆனால் அவரின் பார்வையைச் சொல்லும் காட்சிகளும், வசனங்களும் மிஸ்ஸிங்!

வண்ணமயமான பிரேம்களில் கொண்டாட்டமாகப் படத்தை நகர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மல்லிகா அர்ஜுன். YNC சிவாவின் படத்தொகுப்பு ராம் – லீலா கதையின் வேகத்தைக் கூட்டி சுவாரஸ்யப்படுத்த முயல்கிறது. அங்கித் மேனனின் இசையில் ‘செப்பு சிலை’ பாடல் மட்டும் தாளம்போட வைக்க, பின்னணி இசை காமெடிக்கு கரம் கொடுக்க போராடியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *