“ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு!” – நடிகை கெளதமி |”Samantha put immense effort into every single process!” – Actress Gautami

Spread the love

இந்த நிகழ்வில் பேசிய நடிகை கெளதமி, “இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு முதல் காரணம் இந்தப் படத்தோட இயக்குனர் நந்தினியும் தயாரிப்பாளர் சமந்தாவும்தான்.

அவர்கள் பெண்கள் என்பதைத் தாண்டி போராளிகள், வலிமையானவர்கள், உறுதியானவர்கள். அவங்க யார் என்பது அவங்களோட வேலையின் மூலம் நமக்குத் தெரியும்.

இந்தப் படத்துல இவங்களோட வேலை செய்வது என் வழியில நான் இவர்களுக்குத் தெரிவிக்கிற பாராட்டு. இந்தப் படத்திற்குப் பின்னாலும், இந்த கதை படமா மாறுவதற்கு பின்னாடி இருக்கிற ஒவ்வொரு செயல்முறையில் சமந்தாவின் மிகப்பெரிய உழைப்பு இருந்திருக்கு.

பொதுவாக ஒரு படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி எடுத்தா அதை எல்லாரும் போற்றிப் பேசுவாங்க. ஆனா இந்த படம் பெண்களோட அதிகாரத்தைப் பற்றினது இல்லை. இந்த படம் பாலினம் இல்லாத பொதுவான அதிகாரம் பற்றியது.

இந்த படம் நிச்சயமாகப் பார்க்கிற எல்லாருக்குமே பிடிக்கும். அந்த வகையில் தான் இந்த படம் எடுக்கப்பட்டுருக்கு. இந்த படத்திற்காக உண்மையாக உழைப்பு போட்டிருக்கிற அத்தனை பேருக்கும் இலக்குகளும் கனவுகளும் நிறைய இருக்கு” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *